Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நீ என்னை காதலிக்க வேண்டும்” வாலிபரின் வெறிச்செயல்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த  வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பகுதியில் சுதாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.    மேலும் தன்னை காதலிக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 18.8.2019 அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியை சுதாகரன் கடத்தி சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின்  பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுதாகரனை கைதுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த போக்சோ  நீதிமன்ற நீதிபதி எழிலரசி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சுதாகரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்  என அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 நாட்களுக்குள் 20 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |