Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நீ என்னை கல்யாணம் பண்ணு” லவ் டார்ச்சரால்…. பினாயிலை குடித்த இளம்பெண்…. தலைமறைவான காதலன்…!!

இளைஞர் ஒருவர் தன்னை காதலிக்குமாறு கட்டயப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் மோட்டு குடிசை கிராமத்தில் வசிப்பவ சந்தியா (21). இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த கோதண்டராமன் என்ற இளைஞர் சந்தியாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் சந்தியா கோதண்டராமனை காதலிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கோதண்டராமன் சந்தியாவை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ள்ளார்.

இதற்கு சந்தியா மறுத்ததால் இருவரும் இணைந்திருப்பதாக போட்டோ எடிட் செய்து கோதண்டராமன் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். இதையடுத்து பொங்கல் பண்டிகையையொட்டி தனது சொந்த கிராமத்திற்கு சந்தியா வந்தபோது சமூக வலைதளங்களில்  பரவிய போட்டோவை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் சந்தியா வீட்டிற்கு சென்ற கோதண்டராமன் “நீ என்னை கல்யாணம் பண்ணலான நான் தற்கொலை செய்து கொள்வேன்” என்று மிரட்டியுள்ளார்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாத சந்தியா வீட்டில் இருந்த கழிவறைக்கு பயன்படுத்தும் பினாயிலை எடுத்து குடித்துள்ளார். இதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சந்தியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சந்தியாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள கோதண்டராமனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |