மார்த்தாண்டம் அருகே வாலிபர் ஒருவர் தனது காதலியை மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்த சொல்லி வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். அந்த ஊருக்கு பக்கத்து ஊரை சேர்ந்த பெண் ஒருவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவ்வழியாகச் சென்ற கல்லூரி மாணவருக்கும், அந்த வாலிபருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் காதலிக்க தொடங்கினர். வாலிபர் மாணவியை கண்மூடித்தனமாக காதலித்தார். மாணவி எங்கு சென்றாலும் பின் தொடர்வது, நான் உயிர் வாழ்வதே உனக்காகத்தான் என பல வசனங்களை பேசி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மாணவி தன்னை உண்மையாக காதலிக்கிறாரா? என தெரிந்து கொள்ள விரும்பிய இளைஞன் மாணவியின் மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்த சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதனால் மாணவி பயந்து அரண்டு போய் உள்ளார். இது தொடர்பாக மாணவி தனது வீட்டில் தெரிவிக்க இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பிறகு போலீசார் வாலிபரை தூக்கி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து அவரிடம் விசாரித்த போது தான் மாணவியை காதலிப்பதாகவும், அவள் தனக்கு வேண்டும் என்றும் கூறிவந்துள்ளார்.