எஸ்.பி.பி. மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சினிமா திரையுலகையும் தாண்டி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் பின்னணி பாடகரான எஸ்.பி.பி பாலசுப்ரமணியத்திற்கும் இடையே நெருங்கிய நட்புறவு உண்டு. தமிழ் சினிமா திரைப்படங்களில் எண்ணற்ற பாடல்களை இவர்கள் இணைந்து பாடியுள்ளனர். சமிபத்தில் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது “பாலு சீக்கிரம் எழுந்து வா” என இளையராஜா காணொளி மூலம் தனது வருத்தத்தை வெளியிட்டார். எஸ்.பி.பி மீண்டு வரவேண்டும் என்று அவருக்காக பல பிரார்த்தனையும் செய்துவந்தார்.
இதனிடையே எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு இளையராஜாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி பேசக்கூட முடியாமல் நிலைகுலைந்து போனார். நீ கேட்கல போயிட்ட எங்க போன கந்தவர்களுக்காகப் பாடுவதற்காகப் போயிட்டியா இங்கு உலகம் ஒரே சூனியமாக இருக்கிறது. எனக்கு இந்த உலகத்துல ஒன்றுமே தெரியல, பேச வார்த்தைகளே இல்ல, என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல. எல்லா துன்பத்துக்கும் ஒரு அளவு இருக்கு. ஆனால் இதற்கு அளவே இல்லை என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.