Categories
தேசிய செய்திகள்

“நீ அழகாக இல்லை “.. விவாகரத்து கேட்டு மனைவியை கடுமையாக தாக்கிய கொடூரன்..!!

மனைவி அழகாக இல்லை என்று விவாகரத்து கேட்டு கடுமையாக தாக்கியுள்ளார் கணவர் என்னும் கொடூரன்..!

கர்நாடக மாநிலம், பெங்களூர் மாரேனஹள்ளியைச் சேர்ந்தவர் சசிகுமார்.  இவருக்கும் விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான 6 மாதங்களாக இரண்டுபேரும் சந்தோசமாக குடும்பம் நடத்தினர். இந்த நிலையில், சில மாதங்களாக திடிரென்று மனைவி விஜயலட்சுமியிடம் சசிகுமார் கடுமையாக நடந்துக்கொண்டிருக்கிறார்.

அவர் தன்னுடைய மனைவியை பார்த்து நீ அழகாக இல்லை என்றும், அதனால் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றும், கூறிருக்கிறார். மேலும் உன்னுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை, நான் வேறு பெண்ணை மணமுடிக்க போகிறேன் என்று  கடுமையாக பேசிருக்கிறார். இதனால் விஜயலட்சுமியிடம் விவாகரத்து கொடுக்கும்படி கேட்டு வற்புறுத்திருக்கிறார்.

இதற்கு மறுத்த விஜயலட்சுமியை அவர் இரும்பு கம்பியால்  தாக்கிருக்கிறார். ஒருக்கட்டத்துக்குமேல், கணவரின் கொடுமையை தாங்க முடியாமல், பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார் விஜயலட்சுமி. பிறகு  விஜயலட்சுமியின் பெற்றோர், குடும்பத்தினர் ஆகியோர் வந்து அவரை சசிகுமாரை சமாதானப்படுத்தி விட்டு சென்றனர்.

இருந்தாலும் சசிகுமார் தொடர்ந்து விவாகரத்து கேட்டு மிரட்டி வந்துள்ளார். விஜயலட்சுமி இதற்கு சம்மதிக்காததால் கோபமடைந்த அவர் ஹெல்மேட்டால் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்தார் விஜயலட்சுமி. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர்.  இது தொடர்பாக அப்பபகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |