Categories
சினிமா

நீல வண்ண லிப்ஸ்டிக் போட்ட பிரபல நடிகை…. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்….!!!!

தொலைக்காட்சியில் நடிகை, பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் மாடல் அழகி என பன்முக தன்மை கொண்டவர் ஊர்வி ஜாவித். இவர் ரசிகர்கள் உள்ளிட்ட ஒவ்வொருவரின் கவனத்தையும் தன் பக்கம் திரும்புவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நன்கு அறிந்தவர். ஆடை அணிவது, ஒப்பனை செய்வது, வீட்டை விட்டு வர வெளியே வருகிறார் என்றால் ஒவ்வொருவரும் தன்னை திரும்பி பார்க்க வேண்டும் என்பதில் கவனமுடன் செயல்படுவார். இந்த முறை அப்படி என்ன செய்து விட்டார். எப்போதும் முக அழகின் ஒரு பகுதியாக உதட்டில் வண்ணம் சாயம் பூசுவது பெண்ணின் வழக்கம்.

அவற்றில் இளஞ்சிவப்பு, பிங்க் போன்ற உதட்டின் இயற்கை வண்ணத்திற்கு ஏற்ப லிப்ஸ்டிக்கலை பயன்படுத்துவார்கள். இந்நிலையில் நடிகை ஊர்வி ஜாவித் வெண்மை நிற ஆடையுடன் நீல வண்ண லிப்ஸ்டிக் மற்றும் நக்பூச்சுகளை போட்டோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர். அதன்படி ஒருவர், நடிகை மையை குடித்து விட்டாரா? என்று கேலி செய்துள்ளார். அதனைப் போலவே பலரும் இதே கேள்வியே முன்வைத்து உள்ளனர்ம் மற்றொருவர் மேடம் உதட்டில் இன்ங் பூசி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |