கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணியை விரைவு படுத்த முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து கொண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார். நீலகிரியில் தொடர் கனமழை காரணமாக வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories
நீலகிரியில் மீட்பு பணியை தீவிர படுத்த…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!
