Categories
மாநில செய்திகள்

நீர் மேலாண்மையில் தமிழ்நாடு 3வது இடம்….. மத்திய ஜல் சக்தி துறை அறிவிப்பு….!!

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2020 ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில் மத்திய ஜல் சக்தி துறை இன்று அறிவித்தது. அந்த பட்டியலில் முதலிடத்தில் உத்திரப்பிரதேசம் மற்றும் இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் இடம்பெற்றுள்ளது. தமிழகத்திற்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து டெல்லியில் அறிவிக்கப்பட்ட 3 வது தேசிய விருதுகள் பட்டியலில் தெற்கு மண்டலத்தில் சிறந்த கிராம பஞ்சாயத்து பிரிவில் செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளபுதூர் பஞ்சாயத்து தேர்வாகியுள்ளது. மேலும் சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புப் பிரிவில் மதுரை மாநகராட்சி 3 வது இடத்தை பிடித்துள்ளது.

Categories

Tech |