Categories
தேசிய செய்திகள்

நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு… ஏவுகணை சோதனை… வெற்றி கண்ட டி.ஆர்.டி.ஓ… ராணுவ மந்திரி பாராட்டு…!!!

ஒடிசாவில் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் இருக்கின்ற வீலர் தீவில் இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு நேற்று டார்பிடோ எனப்படும் நீர்மூழ்கி குண்டுகளை செலுத்த உதவும் சூப்பர்சானிக் ஏவுகணை என்ற சோதனையை நடத்தினர். அந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது என இந்திய மேம்பாட்டு அமைப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த சோதனையின் போது ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை தாக்கியது. அதிலும் குறிப்பாக மெக்கானிசத்தை நிலை நிறுத்துதல், டார்பிடோவை வெளித்தள்ளுதல், கூம்பு பிரிதல் போன்ற அனைத்து நோக்கங்களிலும் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

அதனால் நீர்மூழ்கி கப்பலுக்கு எதிரான தடவாத உருவாக்கத்தில் மிக முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அந்த ஸ்மார்ட் சோதனையை மிக வெற்றிகரமாக நிகழ்த்திய அதிகாரிகள் அனைவருக்கும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தனது பாராட்டுகளை கூறியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சூப்பர்சானிக் ஏவுகணை உதவியுடன் டார்பிடோ ஏவும் சோதனையை இந்திய மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான தளவாட தயாரிப்பில் இது மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனை”என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |