நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. அணையில் மொத்த கொள்ளளவு 52 அடியில் நீர்மட்டம் 50.65 அடியாக இருக்கின்றது.
அணையில் இருந்து பாசன கால்வாய்கள் மற்றும் ஆற்றிலும் வினாடிக்கு 1214 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கின்றது. இது போலவே ஊத்தங்கரை அருகே இருக்கும் பாம்பாறு அணைக்கு நீர்வரத்து நேற்று நான்காவது நாளாக வினாடிக்கு 70 கன அடியாக நீடித்திருக்கின்றது. மேலும் அணையில் இருந்து வினாடிக்கு 70 கான அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.