தமிழக கிராமங்களில் மூன்றில் ஒருவருக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
ஸ்காட்லாந் ட்ராண்டி பல்கலைக்கழகமும், சென்னை நீரிழிவு ஆராய்ச்சி மையமும் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25 கிராமங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
அதன்படி கடந்த 14 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 4.9 %லிருந்து 3.5 % அதிகரித்துள்ளது. கிராமங்களில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோயின் தாக்கம் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
நீரிழிவு நோயின் தாக்கம் இருப்பவர்களில் 45 சதவீதம் பேர் அதிக உடல் பருமனுடன் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாறிவரும் உணவு மற்றும் வாழ்க்கை முறையை நீரிழிவு பாதிப்பு அதிகரிக்க காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இளம்வயதினருக்கு கூட நீரிழிவு நோயின் தாக்கம் அதிகம் இருப்பது ஆய்வில் தெரியவந்துருக்கிறது, என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிராம மக்களிடையே நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்