நீரழிவு நோயாளிகள் இந்த கோடை காலத்தில் எந்த பழங்களை முக்கியமாக சாப்பிடவேண்டும் என்பதை குறித்து இன்று தொகுப்பில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
நீரழிவு நோயாளிகள் கோடைக் காலம் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரிழைக் கட்டுக்குள் வைக்க தவறுபவர்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். கோடை காலங்களில் வெயில், வெப்ப சோர்வு, உடல்நல பிரச்சனைகள் காரணமாக நீரிழிவை கட்டுக்குள் வைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால் நமக்கு தேவையான காய்கறிகள் பழங்களை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
நார்ச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை நாம் எடுத்துக் கொண்டால் சக்கரை அளவு சரியான அளவில் இருக்கும். முதலில் நீங்கள் வெள்ளரிக்காயை உங்கள் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்களில் மிக முக்கியமானது வெள்ளரிக்காய். நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது.
அடுத்தது தக்காளி தக்காளி சிறந்த குணங்களை கொண்டது. ஒரு கப் தக்காளியில் 300 கலோரிகள் உள்ளது. இது கோடை காலத்தில் மிகவும் உகந்தது. கண்கள், பற்கள், எலும்புகள், சருமம் போன்றவற்றை பராமரிக்க இந்த தக்காளி உதவுகிறது. எனவே காய்கறிகளுடன் தக்காளியை எடுத்துக் கொள்வது நீரழிவு சிக்கலில் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
குடைமிளகாயில் வைட்டமின் சி மற்றும் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உண்ணும் போது சர்க்கரை விரைவாக ரத்தத்தில் கலப்பதைக் தடுக்கின்றது. பச்சை மிளகாய் காட்டிலும் மஞ்சள் , சிவப்பு நிற குடைமிளகாய் தேர்வு செய்தால் நல்லது.
பழங்கள் ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற பழங்கள் மிகவும் நல்லது. இதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் டயாபடீஸ் பிரச்சனை உள்ளவருக்கு மிகவும் உகந்தது.
கோடை காலங்களில் மிகவும் அதிகளவில் சாப்பிடப்படும் பழம் என்றால் அது தர்பூசணி. இது நீர்ச்சத்து மிக்க பழம். இந்த உணவை நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொண்டால் உடலில் சக்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.