Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீரில் மூழ்கிய நெற்கதிர்கள்…. அறுவடை செய்யமுடியாமல் வேதனை…. விவசாயிகளின் கோரிக்கை….!!

கடந்த 2 தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக நிற்கும் நெற்பயிர்கள் சரிந்து சேதமடைந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள திருவொற்றியூர் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள வயல்களில் மழை நீர் சூழ்ந்து தேங்கி கிடக்கிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்கள் அனைத்தும் மழையால் சரிந்து கிடக்கிறது. மேலும் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அறுவடை செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் அமைச்சர்கள், வேளாண்மை துறையினர், பயிர் காப்பீட்டு துறையினர் ஆய்வு செய்தது போல் இந்த பகுதிகளிலும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும், பயிர்கள் சேதமடைந்துள்ளதால் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |