Categories
சினிமா தமிழ் சினிமா

“நீயா, நானா போட்டியில் கவர்ச்சி கார்ட்டும் நடிகைகள்” அதிகரித்த போட்டோஷுட் மோகம்….!!!!!

சினிமாவில் நடிகைகள் அடிக்கடி நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது. முன்னணி ஹீரோயின்கள் முதல் இளம் ஹீரோயின்கள் வரை தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி இணையதளத்தில் வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றனர். சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த கிரண் தற்போது மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதாக நெட்டிசன்கள் இணையதளத்தில் விளாசி வருகின்றனர். அதோடு நடிகை கிரண் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதற்காக தனியாக செயலி ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த செயலியில் புகைப்படத்தை பதிவிடுவதற்கு கட்டணம் வசூலித்து வருவதாகவும் கூட சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான ஷிவானி, ஐஸ்வர்யா தத்தா, சாக்ஷி அகர்வால், யாஷிகா ஆனந்த், ரம்யா பாண்டியன் மற்றும் ரைசா வில்சன் ஆகியோரும் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுகின்றனர். இதேப்போன்று முன்னணி நடிகைகளான பாவனா, எமி ஜாக்சன், அமலாபால் போன்ற நடிகைகளும் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுகின்றனர். இப்படி ஹீரோயின்கள் போட்டி போட்டு  புகைப்படங்களை வெளியிடுவது ரசிகர்களை கவர்ந்தாலும் சிலர் இப்படியா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது என்று விமர்சித்தும் வருகின்றனர். ஆனால் எப்படி விமர்சனம் வந்தாலும் நடிகைகள் சினிமாவை பொறுத்தவரை கவர்ச்சி காட்டுவது தவறில்லை ஆபாசம் காட்டுவது தான் தவறு என்று கூறி வழக்கம்போல் தங்களுடைய புகைப்படங்களை பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.

Categories

Tech |