Categories
தேசிய செய்திகள்

“நீதி தரும் நீதிமன்ற வளாகத்திலேயே அரங்கேறிய கொடுமை”… உத்தர பிரதேசத்தில் பரபரப்பு…!!!

நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் மூன்றாவது தளத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வழக்கறிஞரின் பெயர் பூபேந்திர சிங். இவர் நீதிமன்றத்தின் மூன்றாவது தளத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரின் அருகில் நாட்டு துப்பாக்கி இருந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவரிடம் விசாரணை செய்தபோது வழக்கறிஞர் பூபேந்திர சிங் யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தாகவும் சிறிது நேரத்தில் திடீரென்று பலத்த சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகின்றது.

பின்னர் போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் கூறுகையில்: “வழக்கறிஞர் பூபேந்திர சிங் தனியாக இருந்துள்ளார். சம்பவம் நடந்த போது அவரைச் சுற்றி வேறு யாரும் இல்லாததால் என்ன நடந்தது என்பது குறித்து சரியாக தெரியவில்லை. தடவியல் குழு தடயங்களை சேகரித்து வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |