ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள உதம்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென குண்டு வெடித்ததில், ஒருவர் பலியானார். மேலும் இச்சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 13 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் குண்டு வெடிப்பிற்கான சரியான காரணம் தெரியவில்லை. எனவே அதுகுறித்து கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.