நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய பதிவு சட்ட கால வரம்பு தடையாக இல்லை என்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்ற சுற்றறிக்கையை அனைத்து சார்-பதிவாளர்களுக்கும் அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தீர்ப்புகளை பதிவு செய்ய மறுக்கும் பதிவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் தீர்ப்புகளை பதிவு செய்யும்போது, வழக்கின் மதிப்பு அடிப்படையில் மட்டுமே பதிவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து சொத்து மதிப்பில் பதிவு கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தத் நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய மறுத்த சார்-பதிவாளர் உத்தரவிற்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Categories
“நீதிமன்ற தீர்ப்புகளை பதிவு செய்ய உத்தரவு”… உயர் நீதிமன்றம் எச்சரிக்கை…!!!!!
