கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டு மொத்த நீதி துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது எனும் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் சவுக்கு சங்கர் பகிரங்கமாக கூறியிருந்தார். ஒட்டுமொத்த நீதி துறையே அதிர செய்த அவரது இந்த கருத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது அண்மையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சவுக்கு சங்கர் ஆமாம் நான் அப்படித்தான் கூறினேன்.. என நீதித்துறை பற்றி தான் கூறிய கருத்தை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். இதனை அடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன், புகழேந்தி போன்றோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணையில் வந்தது. அப்போது நீதித்துறை மீதே களங்கம் கற்பிக்கும் விதமாக உலகத்தில் பகிரங்கமாக கருத்து தெரிவித்த சவுக்கு சங்கருக்கு சவுக்கடி தருவது போல நீதிபதிகள் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நிலையில் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பு வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனி நபர்களின் கருத்துகளால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதி அல்ல சவுக்கு சங்கிற்கான சிறை தண்டனை என்பது அதிகப்படியானது என அவருக்கு ஆதரவை தெரிவித்துள்ளார். இந்த சூழலில் ஆடிட்டரும் வலது சாரி சிந்தனையாளராகவும் அறியப்படும் குருமூர்த்தி கடந்த வருடம் துக்ளக் இதழின் 51 வது வருட ஆண்டு விழாவில் நீதிபதிகள் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி இருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
அதில் அவர் தற்போது நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்லோரும் அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள் யார் மூலமோ போய் யாருடைய காலையோ பிடித்து தான் நீதிபதிகளாக பல பேர் வந்திருக்கின்றார்கள். மேலும் இது இன்று நாம் மிகவும் வருத்தப்பட வேண்டிய செய்தி தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் வந்தால் இதுபோன்றதொரு நிலை இருக்காது என குருமூர்த்தி பகிரங்கமாக பேசியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் இருந்ததை அடுத்து தான் அவதூறாக பேசியதற்கு மன்னிப்பும் கேட்டிருந்தார் குருமூர்த்தி. இவ்வாறு நீதிபதிகள் பற்றியும் அவர்களின் தகுதி பற்றியும் விமர்சித்து மிகவும் மோசமாக பேசியிருக்கிற குருமூர்த்தியை சிறை அனுப்புமா என்னும் கேள்வி பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்டு வருகிறது. எவ்வளவு கீழ்த்தரமாக பேச வேண்டுமோ பேசிவிட்டு மன்னிப்பு கேட்டு விட்டால் எல்லாம் சரியாக விடுமா பிராமணனுக்கு ஒரு நீதி சூத்திரனுக்கு ஒரு நீதியா..? என்னும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.