Categories
சினிமா தமிழ் சினிமா

நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு…. “கோப்ரா” படத்தை இணையதளங்களில் வெளியிட தடை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!

கோப்ரா திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, லலித் குமார் தயாரித்துள்ளார்.

கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் படம் ரிலீஸ் ஆகவில்லை. இதனையடுத்து தற்போது படத்தின் புதிய ரிலீஸ் செய்தியை படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் கோப்ரா ரிலீஸாக உள்ளது.

இந்தநிலையில் இப்படத்தை அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 29 இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 1788 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசப்பட்டதாவது, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இப்படத்தை வெளியிட இருப்பதால் திருட்டுத்தனமாக இணையத்தில் படத்தை வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும். மேலும் திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என மனதார தரப்பில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி கோப்ரா திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |