Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நீதிமன்றத்திற்குள் புகுந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த பணியாளர்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

நீதிமன்றத்திற்குள் புகுந்த நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம்-வேப்பூர் சாலையில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் அலுவலக பணியாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ஆவண காப்பக அறைக்குள் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருந்ததை பார்த்து நீதிமன்ற அலுவலர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நல்ல பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

Categories

Tech |