சொத்து தகராறில் முதியவரை தாக்கிய தந்தை-மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரேசபுரம் கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக கலியபெருமாளுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் கலிய பெருமாளுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கலியபெருமாளின் சகோதரரான மனோகரன் மற்றும் அவரது மகன் அபிஷேக் ஆகிய இருவரும் இணைந்து வயலுக்கு சென்றனர்.
அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த கலியபெருமாளிடம் இது எங்கள் நிலம் என கூறி தந்தையும் மகனும் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த கலியபெருமாள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனோகரன் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.