Categories
தேனி மாவட்ட செய்திகள்

நீதித்துறை சார்பில் முதன் முறையாக புகார் பெட்டி…. மாணவிகளின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு…. வெளியான தகவல்…!!!

அரசு பள்ளியில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடந்த விழாவின் போது நீதித்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. இந்த பெட்டியை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோபிநாதன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், துணை போலீஸ் சூப்பிரண்டு பால் சுதிர் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது திறந்து வைக்கப்பட்ட புகார் பெட்டியின் சாவியை டிஎஸ்பி பிரவீன், நீதிபதி ராஜ்மோகனிடம் கொடுத்தார். அதன் பிறகு நீதிபதி ராஜ்மோகன் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார்.

அவர் நீதிமன்றங்களின் மூலம் ஏராளமான தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும், அவை நிறைவேற்றப் படுகிறதா என்பது சந்தேகம் தான் என்றார். சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த புகார் பெட்டியை நீதிமன்றத்தின் சார்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆலோசனை குழு செயலாளர் கண்காணிப்பார். இந்த புகார் பெட்டிகள் மூலம் மாணவிகள் தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை தெரிவிக்கலாம். அந்தப் பிரச்சினைகள் உங்களுடைய கல்வி, தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் மற்றவர்களால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் போன்ற அனைத்து விதமான புகார்களையும் தெரிவிக்கலாம்.

நீங்கள் கொடுக்கும் புகார்கள் உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பிறகு கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருடைய மனநிலை பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்தால் அவரின் மரணத்தை தடுத்திருக்கலாம் என்றார். மேலும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக போக்சோ சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை யாரிடம் செல்வது என்று தயங்காமல் பிரச்சனைகள் குறித்து புகார் பெட்டியில் எழுதி போடுங்கள் என்றார்.

Categories

Tech |