Categories
அரசியல் மாநில செய்திகள்

“நீதான் வீராதி வீர சூராதி சூரன் ஆச்சே”…. முடிஞ்சா இத பண்ணு பார்க்கலாம்…. பொங்கி எழுந்த ஜெயக்குமார்….!!!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதியின் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய ஜெயக்குமார், சேற்றிலையே  விழுந்து புரளும் பிராணிகள் அங்கும் இங்கும் ஓடி அனைவர் மீதும் தன் உடம்பில் ஒட்டி இருக்கும் சகதிகளை பூசுவது போல கோபாலபுரம் குடும்பத்தின் கொத்தடிமையாக இருக்கும் ஆர்எஸ் பாரதி என்கிற நாளாந்தர பேர்வழி பேட்டி என்ற பெயரில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இ பி எஸ் மீது விஷத்தை கக்கி கொண்டிருக்கிறது. திமுகவின் ஆட்சியை தமிழக மக்களே நன்றாக அறிவார்கள்.

நீதான் வீராதி வீரன் சூராதி சூரன் சூரபத்மனன் பேரன் என்று மார்த்தட்டும் நபரை தலைவராக பெற்று இருக்கிறாயே மக்கள் நலனுக்காக வரிகளையும் கட்டிடங்களையும் உயர்தாமல் மக்கள் சுமையை குறைக்க சொல்ல வேண்டியது தானே?.இந்த ஆட்சியின் அவலங்களை நாங்கள் சொல்லும் அதே நேரம் பல மாவட்டங்களில் மனசாட்சி இருக்கும் திமுக தொண்டர்களே வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். உங்களின் சலசலப்புக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்?. நாங்கள் தரம் தாழ்ந்தால் திருக்குவளை குடும்பத்தில் ஒருவர் கூட மிஞ்ச மாட்டார்கள் என்று ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்து எச்சரிக்கை விடுத்து பேசி உள்ளார்.

Categories

Tech |