பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முருகன் மது குடித்துவிட்டு தனது மனைவி மல்லிகாவிடம் அடிக்கடி தகராறு செய்தது வந்துள்ளார். அதேபோல் நேற்றும் முருகன் மது குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மல்லிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த முருகன் நீண்ட நேரமாக கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கவில்லை.
இதனால் முருகன் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது மல்லிகா பிணமாக தொங்கி நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று மல்லிகாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.