Categories
சினிமா தமிழ் சினிமா

“நீண்ட நாள் கழித்து ரஜினி செய்துள்ள செயல்”…. இது நம்ம எதிர்பார்த்தது தானே பா…!!!!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி பதிவு செய்திருக்கிறார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி. தற்போது நெல்சன்  இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். 169வது படமான இப்படத்தை அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த அறிவிப்பு கலக்கலான ப்ரோமோவின் மூலம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஜினியின் கடைசி படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும், அவரது மகள் ஐஸ்வர்யாவின் விவாகரத்தின் காரணத்தினாலும் இனி நடிப்பாரா என்ற கேள்வி இருந்தது.

தற்போது இவை அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக ரஜினி தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ரஜினி தனது ட்விட்டரில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் தமிழ்நாட்டின் முதலமைச்சரான மு .க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து ரஜினி பதிவை போட்டுள்ளார். கடைசியாக பொங்கல் தினத்தை முன்னிட்டு ட்விட்டில்  வாழ்த்துக்களை பதிவிட்டார்.  அதன் பிறகு அடுத்த படத்தின் அறிவிப்பை பற்றி கூட பதிவிடவில்லை. இந்நிலையில் இன்று முதல்வரின் பிறந்த நாளுக்காக ரஜினி அவரை வாழ்த்தி பதிவிட்டு இருப்பது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |