ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு சமூக வலைத்தளங்களில் தலைக்காட்டாத தனுஷ் தற்போது அவரும் அவர் மகனும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி 17ம் தேதி இருவரும் பிரிவதாக தனித்தனியாக சமூகவலைத்தளங்களில் அறிவித்தனர். இந்நிகழ்வுக்குப் பின் தனுஷ் இணையதளத்தில் தலைகாட்டவில்லை. ஐஸ்வர்யா கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது இணையத்தில் பதிவிட்டிருந்தார். பின்னர் ஐஸ்வரியா இணையத்தில் செயல்பட்டு வந்துகொண்டிருக்கிறார்.
https://www.instagram.com/p/CaCPBXKPQ5V/?utm_source=ig_web_button_share_sheet
ஆனால் தனுஷ், இணையதளப்பக்கம் வரவே இல்லை. இதனையடுத்து தற்போது “நானே வருவேன்” திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ஊட்டிச்சென்ற தனுஷ் தன் மகன் யாத்ராவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் யாத்ரா தனுஷைப் போலவே உள்ளதாகவும் குட்டி தனுஷ் எப்பொழுது நடிக்கப்போகிறார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.