சிறையிலிருந்து வெளியான சசிகலா நீண்ட ஓய்வுக்கு பிறகு நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் ராகு பகவானுக்கு யாகம் செய்தார்.
பெங்களூரு சிறையிலிருந்து வெளியான சசிகலா கடந்த பிப்ரவரி எட்டாம் தேதி சென்னை திரும்பினார். இதில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறிய சசிகலா அதன்பின் அமைதியாகிவிட்டார். அரசியல் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டார் சசிகலா.
இந்நிலையில் நீண்ட ஓய்வுக்கு பிறகு நாகை மாவட்டம் நாகநாத திருக்கோவிலில் ராகு பகவானுக்கு சிறப்பு யாகம் செய்தார். பின் மனமுருகி வழிபாடு செய்த சசிகலா கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ராகத்தில் பங்கேற்றதாக தெரிவித்தார்.