அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த மாணவர் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தினால் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் பெரும் வேதனை அளிக்கிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்த அரசு, சட்டசபை ஆரம்பித்தவுடன் தீர்மானத்தை உடனடியாக கொண்டுவந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் மாணவர்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கும்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்த நிலையில், நீட் தேர்வு நடத்திய ஆக வேண்டும் என்ற மத்திய அரசின் பிடிவாதத்தால் மாணவ, மாணவிகள் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். இந்த அவல நிலை மாறவும், மாணவர்கள் இழப்பைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நீட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.