தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களின் 35 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு மத்திய அரசால் நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த முறை நீட் தேர்வுக்கு 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும் 17 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு எழுதப்பட்டது. தமிழில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் 17,840 பேர் தேர்வு எழுதிய நிலையில் அதில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் 20 முதல் 25 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளன. விழுப்புரம், விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரையில் அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. திருப்பத்தூரில் ஏழு சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையைப் பொறுத்தவரையில் 172 பேர் தேர்வு எழுதிய நிலையில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் தேர்வு எழுதிய 8,061 அரசு பள்ளி மாணவர்களில் 1957 பேர் தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.