கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்னும் மாணவர் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் அந்த மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்திருக்கின்றார். பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அந்த மாணவர் 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனை அடுத்து விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண் வழங்க கோரி மத்திய அரசிற்கும் தேர்வு முகமைக்கும் மனு அனுப்பியுள்ளார்.
அவரது மனு பரிசீலிக்க படாததை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கேள்வியை தவிர்க்காமல் ஏதாவது ஒரு விடையை அளித்து இருந்தால் மட்டுமே கருணை மதிப்பெண் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இது சம்பந்தமான விதியை எதிர்த்து புதிதாக வழக்கு தொடர அனுமதி கூறாமல் வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக வழக்கு தொடராமல் அனுமதி பெறாமல் அதே கோரிக்கையுடன் மீண்டும் தொடரப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கின்றார்.
இந்த உத்தரவை எதிர்த்து மாணவர் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு பட்டியலினம் மற்றும் பழங்குடியினருத்தவர்கள் போன்ற விளிம்பு நிலை மக்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அரசியல் சாசனம் தெரிவிக்கின்றது என்று சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட மாணவருக்கு கருணை மதிப்பெண்களாக நான்கு மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.