தமிழகத்தில் கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாராட்டத்தில் ஈடுபட்டதாக புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி முறை கேட்டில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்கு ஒன்று கோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்துள்ளது. இதில் சிபிசிஐடி சிபிஐ தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்கு சில வழிமுறைகளை பரிந்துரை செய்திருக்கின்றனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் தங்களின் புகைப்படம் கைரேகை போன்றவற்றையும் அத்தோடு கருவிழியையும் பதிவு செய்திட வேண்டும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மனுதாரர் பெயர், அவரது பெற்றோர் பெயர், முகவரி போன்றவற்றை பூர்த்தி செய்து கெஜட் அதிகாரியின் மூலம் சான்றொப்பம் பெற்று அதன் பின்பு பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.
மேலும் இந்த விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை நிராகரிக்க வேண்டும் அத்துடன் விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணத்தை தங்களின் வங்கி கணக்கிலோ அல்லது பெற்றோர்களின் வங்கி கணக்கில் இருந்து மட்டுமே செலுத்த வேண்டும். இதனை தொடர்ந்து மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்று சான்றிதழில் அவர்களின் எமீஸ் என்னை பதிவிட வேண்டும். இதனை அடுத்து தேர்வு கூடத்திற்கு வரும் தேர்வர்களை தேர்வுசீட்டில் உள்ள கருவிழி உள்ளிட்ட விவரங்களுடன் ஒப்பீடு செய்ய வேண்டும் அது மட்டுமல்லாமல் தேர்வகள் அனைவரையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும் முறைகேடுகள் ஏற்படாத வண்ணம் தரிப்பதற்காக தேர்வு மையம் மற்றும் கவுன்சிலிங் ஆகிய இடங்களில் கைரேகை பதிவு செய்யப்பட வேண்டும் இதனை தொடர்ந்து பேஸ் ட்ரக்கர் போன்ற கருவிகளை பயன்படுத்த வேண்டும் இதே போல் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டும் என வழிமுறைகளை பரிந்துரைத்துள்ளனர்.