Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு முடிவுகள்…. கடும் மன உளைச்சலில் 564 பேர்…. மாணவ-மாணவிகளுக்கு தொடர் மனநல ஆலோசனை…. அமைச்சர் தகவல்…!!!

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு நாடு முழுவதும் உள்ள 497 பகுதிகளில் அமைக்கப்பட்ட 3570 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகளுக்காக பலரும் காத்திருந்த நிலையில் இன்று நீட் தேர்வு ரிசல்ட் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுனால் பல்வேறு மாணவ-மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு முடிவெடுத்து விடுகின்றனர். இதன் காரணமாக மாணவ மாணவிகளின் தற்கொலையை தடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதோடு நீட் தேர்வினால் கடுமையான மன உளைச்சலில் இருக்கும் 564 மாணவர்களுக்கு தொடர்ந்து மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும், மாணவ-மாணவிகள் அனைவரும் நம்பிக்கையை  இழந்து விடாமல் தைரியமாக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் மனநல ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |