நீட் தேர்வு விடைத்தாள் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றில் உள்ள மதிப்பெண்களில் தவறு உள்ளதாக மாணவி கிறிஷ்மா விக்டோரியா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அவரின் மனுவில் நீட் தேர்விற்கான விடைத்தாளின் படி 196 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் மதிப்பெண் பட்டியலில் 65 மதிப்பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் விடைத்தாளை மாணவியிடம் காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்கு மாணவி வந்தால் விடைத்தாளை காண்பிக்க தயார் என அதன் தரப்பில் கூறப்பட்டுள்ளது