மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வின் தாக்கம் என்ன என்பது குறித்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளதாக முன்னதாக ஏ.கே ராஜன் தலைமையிலான குழு தகவல் தெரிவித்தது. இதனையடுத்து நீட் பாதிப்பு குறித்து நேற்று இரவு வரை [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுமக்களில் கருத்துக்கள் தொடர்பாக வரும் 28ஆம் தேதி ஏ.கே ராஜன் குழுவினர் ஆலோசனை செய்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 85,935 கருத்துருக்கள் பெறப்பட்டுள்ளன என்று ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தகவல் தெரிவித்துள்ளது.