மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.நீட் தேர்வு செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்தல் முகமையின் பெயரில் தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீட் தேர்வு தொடர்பான விபரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
Categories
நீட் தேர்வு: தவறான தகவல்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!!
