நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகளில் மாணவ மாணவிகள் சேருவதற்கு இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவ தகுதித்தேர்வு நீட். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி தேர்வு நடத்தப் பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கான விண்ணப்பம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் விண்ணப்பிக்கும் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் செப்டம்பர் 12-ல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். அதன்படி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை நாளை மாலை 5 மணி முதல் நீட் தேசிய தேர்வு இணையதளம் மூலம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் மா சுப்ரமணியன் தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று தெரிவித்துள்ள. நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை மாணவர்கள் கூட பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வு தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இதன் பிறகு தமிழ்நாடு அரசின் தெளிவான முடிவு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.