மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய இட ஒதுக்கீடு, 10% சதவீதமாக அதிகரிப்பதால் முழு பயன் கிடைக்காது என்று கூறியிருக்கிறார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கும் மா.சுப்ரமணியன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது பேசியதாவது, ஆளுநர், நீட் தேர்விற்கான சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியிருப்பது தமிழ்நாட்டு மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாளை நடைபெற இருக்கும் உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின் ஆளுநரையும், ஜனாதிபதியையும் சந்திப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்குரிய உள் இட ஒதுக்கீடு 10 சதவீதமாக அதிகரிப்பதன் மூலம் முழு பயன் கிடைக்காது. நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என்பது தான் மாணவர்களுக்கு முழுமையான பலனை தரும் என்று கூறியிருக்கிறார்.