நீட் தேர்வு ,ஜெஇஇ மெயின் தேர்வும் எப்போது நடைபெறும் என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்திருந்த நிலையில் தற்போது அதற்கான பதில் என்பது கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ரத்து எல்லாம் செய்யப்படவில்லை. அது நடக்கும் ஆனால் செப்டம்பர் 13ம் தேதி நடக்கும் என கூறியிருக்கிறார் மத்திய மனித வளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால். ஏற்கனவே மே மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் செப்டம்பர் 13-ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
ஜெஇஇ அட்வான்ஸ் மற்றும் மெயின் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வுகள் செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் செப்டம்பர் மாதத்தில் தேர்வுகளுக்கான மாதமாக மாறி இருக்கின்றது. இந்த மாதங்களில் தான் நிலுவையில் இருக்கக் கூடிய பெரும்பாலான தேர்வுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக நீட் தேர்வு மற்றும் ஜெஇஇ தேர்வுகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டிருக்கிறது .