நீட் தேர்வு எழுதும் நேரத்தை அதிகரிக்க உள்ளதாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. இதுவரை நீட் தேர்வு எழுதுவதற்கு மூன்று மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நீட் தேர்வு எழுதுவதற்கு மூன்று மணிநேரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஒரு கேள்விக்கு ஒரு நிமிடம் என்று எடுத்தால் கூட 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
அதன்படி வரும் ஜூலை மாதம் முதல் இந்த தேர்வு நேரம் அதிகரிப்பு நடைமுறை படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு 3 மணி நேரம் 20 நிமிடம் தேர்வு எழுதுவதற்கு நேரம் ஒதுக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.