Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வுக்கு பயந்து….. மீண்டும் ஒரு மாணவி தற்கொலை….. அரியலூரில் அதிர்ச்சி….!!!!

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆரியலூரில் நீட் தேர்வுக்கு பயந்து ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் ரயில்வே நிலையம் அருகே எத்திராஜ் நகரை சேர்ந்த நடராஜன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நிஷாந்தி கடந்த +2 தேர்வில் 529.5 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவி கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் தோல்வியடைந்தார். பின்னர் மீண்டும் முயற்சி செய்வதற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார் .இந்த நிலையில் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கு பயந்து இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த அரியலூர் போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாணவி நிஷாந்தி வீட்டில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில் வேதியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கடினமாக உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தனது தந்தை வெளிநாட்டில் இருந்து வந்து ஊரிலே இருக்க வேண்டும் என்று மாணவி எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

Categories

Tech |