Categories
மாநில செய்திகள்

நீட் எனும் அநீதியை…. எதிர்ப்பது இதனால் தான்…. ஜோதிமணி எம்பி டுவீட்…!!!

தமிழக அரசானது நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பை குறித்து ஆராய கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை அமைத்துள்ளது. இக்குழு செய்த ஆய்வில் ஏ.கே.ராஜன் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவானது நம் நாட்டில் இன்னும் நீட் தொடர்ந்தால் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்தநிலையே தமிழகத்துக்கு உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் புள்ளிவிவரத்தை பற்றி கூறியுள்ளார்.

அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற ஏழை எளிய ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த மாணவர்கள் போராடி படித்து மருத்துவராக கனவு காணுவதை நீட் தேர்வானது எவ்வளவு பெரிய அநீதியை ஏற்படுத்துகிறது என்று திரு ஏ.கே ராஜன் கமிட்டியின் புள்ளி விவரமானது தெரிவிக்கிறது. இதனாலேயேதான்  தமிழகத்தில் நீட் எனும் அநீதியை எதிர்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |