உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நீடித்து வருவதால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான இந்த போர் தொடர்பாக பல்வேறு முறை பேச்சுவார்த்தை நடந்தும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த போர் காரணமாக பல்வேறு ராணுவ வீரர்கள் மற்றும் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் துருக்கியில் ரஷ்யா – உக்ரைன் இடையில் ஏப்ரல் 1 ஆம் தேதி (நாளை) மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இதற்கு முன்பாக மார்ச் 30ஆம் தேதி அன்று துருக்கியில் அண்மையில் சுற்று பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பிறகு உக்ரைனின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த தேதியை அறிவித்ததாக தகவல் வெளியாகிள்ளது.