Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்…. அழிவின் விளிம்புக்கு சென்ற மரியுபோல் நகரம்…. லீக்கான தகவல்…..!!!!!

உக்ரைனில் ரஷ்ய படைகளின் தொடர் தாக்குதல் காரணமாக துறைமுக நகரான மரியுபோல் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளது எனவும் அந்நகரில் சுமார் 1.60 பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யா போர் முடிவில்லாமல் நீடித்து வருகிறது. ரஷ்ய படைகளின் ஆக்ரோஷமான தாக்குதல்களில் உக்ரைன் நகரங்கள் அனைத்தும் உருக்குலைந்து வருகிறது. உக்ரைன் மீதான போரின் முதற்கட்ட இலக்கை எட்டி விட்டதாகவும், இனி உக்ரைனின் கிழக்கு பகுதிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தபோவதாகவும் ரஷ்யா கூறினாலும் இதுவரை அதனை செயல்படுத்தவில்லை. எனினும் உக்ரைன் நகரங்களை சுடுகாடுகளாக மாற்றும் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக துறைமுக நகரமான மரியுபோல் மீதான தாக்குதல்கள் நாளுக்குநாள் அதிமாகி வருகிறது. ரஷ்ய படைகளின் தொடர் குண்டு வீச்சு தாக்குதலால் மரியுபோல் நகரிலுள்ள கட்டிடங்கள் அனைத்தும் எலும்புகூடுகளாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் மரியுபோல் நகரம் அழிவின் விளிம்பில் சிக்கி இருப்பதாகவும், அங்குள்ள அனைவரும் வெளியேற வேண்டும் எனவும் அந்நகர மேயர் வாடிம் போய்சென்கோ தெரிவித்துள்ளார். இதனிடையில் நேற்றைய நிலவரப்படி மரியுபோல் நகரில் சுமார் 1,60,000 பேர் சிக்கி உள்ளனர். அவர்கள் உணவு, குடிநீர், மின்சாரம் என்று அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி சிரமப்பட்டு வருவதாக வாடிம் போய்சென்கோ கூறினார். மரியுபோல் நகரிலுள்ள மக்களை வெளியேற்ற 26 பேருந்துகள் தயார் நிலையில் இருப்பதாகவும், ஆனால், அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ரஷ்ய படைகள் சம்மதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே மரியுபோல் நகரத்துக்கு இதுவரை எந்த உதவிகளும் செய்ய முடியவில்லை என்று மனிதாபிமான உதவிகளை வழங்கும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் தலைநகர் கீவில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இர்பில் நகரை ரஷ்ய படைகளிடம் இருந்து உக்ரைன் வீரர்கள் முழுமையாக கைப்பற்றிவிட்டதாக அந்நகரின் மேயர் அலெக்சாண்டர் மார்குஷின் தெரிவித்தார். இதனிடையில் ரஷ்ய படைகள் மீண்டும் ஒருங்கிணைந்து இருப்பதாகவும், ஆனால் உக்ரைனில் அவர்களால் எங்கும் முன்னேற முடியவில்லை என்றும் அந்நாட்டின் துணை ராணுவ மந்திரி ஹன்னா மால்யர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது “ரஷிய படைகள் தாங்கள் முன்பே கைப்பற்றியுள்ள பகுதிகளில் தங்களின் நிலையை வலுப்படுத்த முயற்சித்து வருகிறது. மேலும் கீவை கைப்பற்ற முயற்சிக்கிறது. இருந்தாலும் அவர்கள் எங்குமே முன்னறே முடியவில்லை” என்று கூறினார்.

Categories

Tech |