Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்….. நிறுத்த இதுதான் ஒரே வழி…. டி.எஸ்.திருமூர்த்தி அட்வைஸ்…..!!!!!

தற்போது உக்ரைன், அமெரிக்க கூலிப் படையின் உதவியுடன் ரசாயன ஆயுத தாக்குதலுக்கு தயாராகி வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இதற்கிடையில் உக்ரைனில் ரசாயன ஆயுத ஆய்வகங்கள் இல்லை. அதற்கு பதில் உக்ரைன் மற்றும் பல்வேறு முன்னாள் சோவியத் நாடுகளில் அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் பொது சுகாதாரம் மற்றும் கால்நடை சுகாதார ஆய்வகங்களே இருக்கின்றன. அது அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகத்துக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது. மேலும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் என்று உக்ரைன் பதிலளித்தது.

இந்நிலையில் இது குறித்து விசாரிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க் நகரில் நடந்தது. இக்கூட்டத்தில் ஐ.நா.வுக்கான ரஷ்யா, அமெரிக்கா, இந்திய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் இந்தியாவினுடையநிரந்தர உறுப்பினரான டி.எஸ்.திரு மூர்த்தி கூறியதாவது, உக்ரைனில் தற்போதைய நிலைமை தொடர்பாக இந்தியா பல்வேறுமுறை தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே நடைபெற்று வரும் நேரடி பேச்சுவார்த்தைகளே போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என இந்தியா நம்புவதாகவும், தூதரக ரீதியான நடவடிக்கை, பேச்சுவார்த்தையைத் தவிர்த்து வேறு வழியில்லை என்றும் திருமூர்த்தி தெரிவித்தார்.

Categories

Tech |