Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்!…. ரஷ்யாவின் அடுத்த பிளான் என்ன?…. டொனேட்ஸ்க் மாகாண கவர்னர் வெளியிட்ட தகவல்…..!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 133வது நாளாக நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இதற்கிடையில் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனிடையில் உக்ரைனின் கட்டுப்பாட்டிலிருந்த லிசிசண்ஸ்க் நகரையும் ரஷ்யா கைப்பற்றியது.

இதையடுத்து லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த நகரங்களில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த பகுதியான டோனெட்க்ஸ் மாகாணத்திலுள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைவதாலும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்பதாலும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி டொனேட்ஸ்க் மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |