உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 150-வது நாளை நெருங்கி இருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷ்யாவிடம் வீழ்ந்தது. இருப்பினும் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷ்யபடையை எதிர்த்து போர் செய்து வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா, ராணுவம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்நிலையில் உக்ரைனுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,171 கோடி) மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி ஜோபைடன் அறிவித்து இருக்கிறார். அதி நவீன ஏவுகணை அமைப்புகள், பீரங்கி குண்டுகள், ராணுவகவச வாகனங்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆயுதங்கள் இத்தொகுப்பில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.