உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் அடிப்படையில் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ஈரானிடம் ரஷ்யா உதவி கேட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்து இருக்கிறது.
அதாவது ஈரானிடம்வுள்ள ஆயுதங்களை தாக்கிச் செல்லும் ஆளில்லா டிரான் விமானங்களை ரஷ்யா வாங்க இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலிவென் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது “ரஷ்யாவுக்கு சில நூற்றுக்கணக்கான ஆயுதங்களை தாக்கிச் செல்லும் ஆளில்லா விமானங்களை ஈரான் வழங்க இருக்கிறது. இந்த விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியை ரஷ்ய படையினருக்கு இம்மாதமே கற்றுக்கொடுக்க ஈரான் தயாராகி வருவதாகவும், அதற்கான ஆதாரங்கள் அமெரிக்காவிடம் இருப்பதாகவும் ஜக் சுலிவென் தெரிவித்து இருக்கிறார்.