பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டில் உரத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக மே மாதம் முதல் ஆகஸ்டு வரையிலான யாலா சாகுபடிக்கு யூரியா கிடைக்கவில்லை. ஆகவே இந்தியாவிடம் இலங்கை நாடானது உதவி கோரியது.
இதுகுறித்து மத்திய உரத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சதுர்வேதியுடன், இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்தா மரகோடா அண்மையில் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இலங்கைக்கு 65 ஆயிரம் டன் யூரியா அனுப்புவதற்கு இந்தியா முன் வந்துள்ளது.
இந்தியாவில் யூரியா ஏற்றுமதிக்கு தடையிருந்த போதிலும் இலங்கை நாட்டிற்கு இந்த உதவியை மத்திய அரசு செய்கிறது. இந்த யூரியா உடனே அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கென மத்திய அரசுக்கு இலங்கை தூதர் மிலிந்தா மரகோடா நன்றி தெரிவித்துள்ளார்.