Categories
தேசிய செய்திகள்

நீச்சல் பழகச் சென்ற 4 சிறுவர்கள்… குளத்தில் மூழ்கி பலி…!!!

கர்நாடக மாநிலத்தில் குளத்தில் நீச்சல் பழகச் சென்ற சிறுவர்கள் 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் மாவட்டத்தில் பாகேபள்ளி தாலுக்கா சஜ்ஜலவரி பள்ளி கிராமத்தில் அருண், பத்ரிநாத், மகேஷ் மற்றும் சந்தோஷ் என்ற சிறுவர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். அவர்கள் நேற்று தங்களது கிராமத்தில் உள்ள குளத்தில் நீச்சல் பழகுவதற்காக சென்றுள்ளனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ஒருவர் பின் ஒருவராக நீரில் தத்தளித்த உள்ளனர். அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக, சிறுவர்களை மீட்பதற்கு முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அதற்குள் நான்கு சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், குழந்தைகளின் உடல்களை குளத்தில் இறங்கி தேடினர். அப்போது வரும் மற்றும் பத்ரிநாத் ஆகிய இருவரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. …

Categories

Tech |