நடிகர் சிம்பு நீச்சல் குளத்தில் ஸ்டைலாக நிற்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலக பிரபல நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து பெரிய தாடி, மீசை என அசத்தலாக மாறி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
“THE BEST PROJECT YOU WILL EVER WORK ON IS YOU “#Atman#SilambarasanTR#STR#SpreadLove#SpreadPositivity #SpreadKindness pic.twitter.com/olxnrg5yom
— Silambarasan TR (@SilambarasanTR_) November 17, 2020
இந்த திரைப்படத்திற்கு அடுத்ததாக சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்நிலையில் சிம்பு தனது புதிய புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். நீச்சல் குளத்தில் கருப்புச்சட்டை அணிந்து அசத்தலாக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பாராட்டி அவரது ரசிகர்கள் வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.